கொரோனா உருமாறிக் கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை திடுக்கிடும் தகவல்
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முறை குறித்து கூறியுள்ளார்.
அதில் கொரோனா உருமாறிக் கொண்டே இருக்கும் எனவும் அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவின் தீவீரம் அதிகமாகும் போதுதான் அதன் வகையினை அடையாளம் காண முடியும் என தெரிவித்தார்.
ஆகவே மக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்,தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வேகமாக பரவும் தன்மை உடையவை எனவே இவற்றை ஆராய்ச்சி செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதாக கூறினார்.
ஆகவே பொது மக்கள் முகக்கவசம் அணி வதையும் , ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடு வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.