சொல்பேச்சை கேட்டு நடக்கும் கரடி - பார்வையாளர்கள் அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ
அமெரிக்காவை சேர்ந்த சூசன் கெஹோ என்ற பெண் கரடிகள் நல ஆர்வலர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
தனியாக யூடியூப் சேனல் ஒன்று வைத்து நடத்திவரும் இவரின் சேனலுக்கு 1500 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தன் பெயரையே சேனலின் பெயராக வைத்திருக்கும் இவர் அண்மையில் ஒரு கரடியின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
அதில், "கரடிகள் பயங்கர ஸ்மார்ட் ஆனவை, இந்தக் கரடி எப்படி எனது வீட்டின் கதவை சாத்துவது என்பதைத் தெரிந்து வைத்துள்ளது" என்று தலைப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கரடி பாதியளவு கதவை சாத்த, சூசன் இடைவெளி வழியே குளிர்ந்த காற்று வருகிறது நன்றாக மூடவும் எனக் கூறுகிறார். அதை கேட்ட கரடியும் வாயால் லாவகமாக கதவைச் சாத்திவிட்டுப் போகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.