அமெரிக்கா வான்வெளியில் ரஷ்யா விமானங்கள் பறக்க தடை - ஜோ பைடன் அதிரடி
ரஷ்யா விமானங்கள் அமெரிக்கா வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 7வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாடும் பதிலடி கொடுத்து வருகிறது.உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்யா நாட்டு படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோபுரமான கீவ் டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.இதில் உக்ரைன் மக்கள் சில பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் ரஷ்யா விமானங்கள் அமெரிக்கா வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜோ பைடன் அமெரிக்க வான்வெளியில் ரஷ்யா விமானங்கள் பறக்க தடை விதிப்பதாக அறிவித்தார்.
நாங்கள் அமெரிக்கா,உக்ரேனியா மக்களுடன் நிற்கிறோம் எனவும் அவர் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உரையாற்றினார்