அமெரிக்கர்கள் ஒரே நேரத்தில் நான்கு நெருக்கடிகளை சந்திக்கிறார்கள்- இனி தாமதிக்க முடியாது: ஜோ பைடன்

america baiden leaders
By Jon Dec 29, 2020 02:13 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி இருக்கிறது.

மேலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தோரின் எண்ணிக்கையிலும் (3.41 லட்சம்) அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ள ஜோ பைடன், அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.