வீட்டில் குழந்தைகள், வயதானவர்களை கவனிக்கும் அரசு ஊழியர் அனைவருக்கும் ரூ.15 லட்சம் : அமெரிக்கா அரசு அறிவிப்பு

people usa biden
By Jon Feb 26, 2021 12:16 PM GMT
Report

அமெரிக்காவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள், வயதான குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே வைத்து கவனித்துக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பை அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. கடந்த வாரம் இதற்கான மசோதாவை பைடன் அரசு வெளியிட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கான அவசரகால விடுப்பு நிதி என அதில் ரூ.4,128 கோடிக்கு மேல் அறிவித்திருக்கிறது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாத குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் மத்திய அரசின் பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30 வரை சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும்.

இம்மசோதாவின் படி முழு நேர அரசு ஊழியர்கள், 600 மணி நேர விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு மணிக்கு 35 டாலர்களும், வாரத்திற்கு 1400 டாலர்கள் வரையும் சம்பளம் அளிக்கப்படும். அதனையடுத்து, அமெரிக்காவின் ஒரு மத்திய அரசு ஊழியர் 15 லட்ச ரூபாய் வரை பெற்று கொள்வார்கள்.

மேலும் கொரோனா காரணமாக வீட்டிலுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்களுக்கும் இதே போல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். பகுதிநேர ஊழியர்களுக்கும் அவர்கள் பணி நேரத்துக்கு இணையான சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.