தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்! உலகின் சாதனை! அதிர்ச்சியில் மக்கள்!

girl america treatment mom
By Anupriyamkumaresan Jul 05, 2021 07:41 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அமெரிக்கா
Report

அமெரிக்காவில் தன் தாய் பிரசவ வலியில் துடிக்க, தன் அப்பா வரமுடியாத நிலையில் இருந்ததால் 9வயது மகளே தாய்க்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்! உலகின் சாதனை! அதிர்ச்சியில் மக்கள்! | America 9 Yr Girl Doing Treatment For Pregnant Mom

அமெரிக்காவின் மிஸ்சோரி மாகாணத்தை சேர்ந்த பெண் ஏஞ்சலிக்கா குண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு அகேலா குண் என்ற 9 வயது மகளும் இருக்கின்றனர். இந்நிலைில் ஏஞ்சலிக்கா தனது இரண்டாவது குழந்தையை வயற்றில் சுமந்து கொண்டிருந்தார்.

தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்! உலகின் சாதனை! அதிர்ச்சியில் மக்கள்! | America 9 Yr Girl Doing Treatment For Pregnant Mom

இந்த நிலையில் இவரது கணவர் அலுவலகத்திற்கு சென்ற அந்த நேரத்தில் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே வலி வந்துவிட்டதால் பதறியடித்து கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் கணவர் அலுவலகத்திலிருந்து கிளம்பியதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொண்டதால், வீட்டில் மனைவி பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தார்.

இதனால், இறுதியில் வேறு வழியில்லாமல் ஏஞ்சலிக்கா தனது மகளை அழைத்து தனக்கு பிரசவம் பார்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார்.

தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்! உலகின் சாதனை! அதிர்ச்சியில் மக்கள்! | America 9 Yr Girl Doing Treatment For Pregnant Mom

ஏஞ்சலிக்கா ஏற்கனவே ஒரு நர்ஸ் என்பதால் அதை அவர் சொல்ல சொல்ல 9 வயது மகள் தனது தாய்க்கு பிரசவம் பார்த்தார். இதில் வெற்றிகரமாக அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிரிந்துள்ளது.