தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் - ஆளுநரின் பேச்சுக்கு அமீர் கண்டனம்

By Nandhini May 08, 2022 09:50 AM GMT
Report

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபாத்தான அமைப்பு என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பயங்கரவாத அமைப்பு என கடுமையாக சாட்டினார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபத்தான அமைப்பு , மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு, என்ற முகமூடிகளை பயன்படுத்துகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுவதாக ஆளுநர் விமர்சித்தார்.

அரசியல் லாபத்திற்காக வன்முறையை துாண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே எனவும் அவர் தெரிவித்தார். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம் என்று பேர் பேசியிருந்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்  ஆளுநரின் பேச்சக்கு கடுமையாக கண்டனத்தை தெரிவித்தார். 

இது குறித்து அந்த பதிவில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஆளுநர் உமிழ்ந்திருக்கும் கருத்துகள் உள்நோக்கம் கொண்டவை. மதப்பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் விதமான ஆளுநரின் கருத்துகள் ஆபத்தானவை. இது நாகலாந்து அல்ல, ஆரியத்தை வீரியமாய் எதிர்த்து வென்ற தமிழ்நாடு என்று நினைவூட்டுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.   

இந்நிலையில், இயக்குநர் அமீர் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளார். 

அந்த டுவிட்டில், வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுக்களை ஆளுநர் போன்றோர் கைவிட்டு தமிழகத்தை அமைதிப்பூமியாக வாழவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் - ஆளுநரின் பேச்சுக்கு அமீர் கண்டனம் | Ameer Sultan Director