அத்துமீறி தனிப்பட்ட இடத்தில் கை வைக்கும்போது... உணர்வை வெளிப்படுத்தும் ரோபோ கண்டுபிடிப்பு..- வைரல் வீடியோ...!

Viral Video United States of America
By Nandhini Oct 19, 2022 09:52 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அத்துமீறி தனிப்பட்ட இடத்தில் கை வைக்கும்போது, உணர்வை வெளிப்படுத்தும் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அச்சு அசல் மனிதனைபோலவே உணர்வு கொண்ட ரோபோ

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் அச்சு அசல் மனிதனைபோலவே உணர்வு கொண்ட ரோபோவை (Ameca humanoid robot) உருவாக்கியுள்ளார்.

இதன் பின்பு, இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் அமெக்கா மனித உருவ ரோபோவுடன் தொடர்பு சோதனை நடத்தியது. அந்த சோதனையில், ரோபோ ஒருவரின் கை அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறது.

மேலும், அதன் கண் கேமராக்களிலிருந்து படங்கள் டென்சர்ஃப்ளோவைப் பயன்படுத்தி செயலாக்குகிறது. ஒருவர் அத்துமீறி 'தனிப்பட்ட இடத்தில்' கை வைக்கும்போது அந்த ரொபோ அதிர்ச்சி அடைந்து எதிர்வினையாக பார்வையிடுகிறது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

Ameca humanoid robot