ஆம்பூரில் அரசு விதிமுறைகளை மீறிய 6 கடைகளுக்கு சீல்

rules shops ambur offence sealed
By Praveen May 04, 2021 04:30 PM GMT
Report

ஆம்பூரில் அரசின் விதிமுறைகளை மீறி செய்ல்பட்ட 6 கடைகளுக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகமெங்கும் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 10,478 பேர் பாதிக்கப்பட்டு 9266 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் 1060 பேர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொற்று அதிகரிக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஆம்பூர் பஜார் மற்றும் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் மீறி கூட்டமாக சேர்த்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முககவசம் அணியாமல் நோய் பரப்பும் வகையில் செயல்பட்ட 2 ரெடிமேட் கடைகள் , 2தேனீர் கடைகள், மற்றும் 3000சதுரடிக்கு மேல் பெரிய அளவில் குளிர்சாதன வசதியுடன் செயல்பட்ட 2 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் விதியை மீறி நோய் பரப்பும் விதமாக செயல்பட்ட கடை உரிமையாளர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

ஆம்பூரில் அரசு விதிமுறைகளை மீறிய 6 கடைகளுக்கு சீல் | Ambur Shop Notrespect Rules Getting Sealed

ஆம்பூரில் அரசு விதிமுறைகளை மீறிய 6 கடைகளுக்கு சீல் | Ambur Shop Notrespect Rules Getting Sealed

ஆம்பூரில் அரசு விதிமுறைகளை மீறிய 6 கடைகளுக்கு சீல் | Ambur Shop Notrespect Rules Getting Sealed