ஆம்பூர் அருகே உணரப்பட்ட நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு: பொதுமக்கள் அச்சம்

earthquake ambur public fear
By Anupriyamkumaresan Nov 29, 2021 05:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ஆம்பூர் அருகே உணரப்பட்ட நில அதிர்வு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை சுமார் 4 மணி 17 நிமிடத்துக்கு வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகி இருப்பதாக தமிழக பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது.

ஆம்பூர் அருகே உணரப்பட்ட நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு: பொதுமக்கள் அச்சம் | Ambur Earthquake Public Fear Shock

லேசான அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலஅதிர்வு சரியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆந்திராவை ஒட்டிய வனப்பகுதியில் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1984, 2002, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அப்போதும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.