எமதர்மன் உருவத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடக கலைஞர்கள்
ஆம்பூரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி எமதர்மன் மற்றும் வேட்டை கருப்பன் வேடமணிந்து பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நாடக கலைஞர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தொற்று பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆம்பூர் நகராட்சி சார்பில் ஆம்பூர் பேருந்து நிலையம் மற்றும் நேதாஜி சாலை பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எமதர்மராஜா மற்றும் வேட்டை கருப்பன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றி திரியும் பொதுமக்களிடம் மாஸ்க் அணிந்து வெளியில் வர வேண்டும் என்று எச்சரிக்கை செய்வது போல அறிவுரை வழங்கினார்.
மேலும் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்ட கடைகளுக்கும் பேருந்துகளிலும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எமதர்மராஜா மற்றும் வேட்டை கருப்பன் வேடம் அணிந்த கலைஞர்கள் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.