ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் - போக்குவரத்து காவல் துறை அதிரடி...!

Tamil Nadu Police
By Nandhini Oct 20, 2022 05:45 AM GMT
Report

ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் செல்பவர்களுக்கு ₹10,000 அபராதம் விதிக்க போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் -

ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் செல்பவர்கள், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க போக்குவரத்து காவல் துறை முடிவெடுத்துள்ளது .

தேவையில்லாமல் ஹார்ன் ஒலிப்பவர்களுக்கு ரூ.1000, அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ambulance-tamilnadu-police