"ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுங்கள்'': மக்களை வழிபடுத்திய கனிமொழி

people dmk kanimozhi cuddalore
By Jon Mar 26, 2021 11:18 AM GMT
Report

  கடலூர் பிரச்சாரத்தின் போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு மக்களை வழிபடுத்திய கனிமொழியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக எம். பி கனிமொழி கடலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை கவனித்த கனிமொழி எம்.பி. உடனடியாக தனது பிரசாரத்தை நிறுத்தினார். இதனை தொடந்து ''ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுங்கள்'' என்று கூட்டத்தினரிடம் கேட்டுக் கொண்டார்.

ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வசதியாக மக்களை ஒழுங்குபடுத்தினார் கனிமொழி. இதனையடுத்து எந்த ஒரு தடையுமின்றி ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு இருந்து சென்றது. ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த கனிமொழியின் இந்த செயல் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.