மன அழுத்தத்தை போக்க கல்யாண ஊர்வலத்தில் நடனமாடிய ஆம்புலன்ஸ் ட்ரைவர்!

ambulance viralvideo driverdance
By Irumporai Apr 28, 2021 08:18 AM GMT
Report

உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் கவச உடையுடன் திருமண ஊர்வலத்தில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்,மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவர்களும் பணியாற்றுகின்றனர்

. இதில் மிகவும் முக்கியமானவர்களாக கருதப் படுபவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்தான் என்றே கூறவேண்டும்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சுசீலா திவாரி மருத்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் தனது மன அழுத்தத்தை போக்க கவச உடையோடு திருமண ஊர்வலத்தில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து டிரைவர் மகேஷ் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் 18 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிந்து வருவதாக கூறினார்.

ஆகவே மன அழுத்தத்தை போக்க திருமண ஊர்வலத்தைக் கண்டதும், நடனமாடியதாக மகேஷ் கூறினார்.