ஆம்பூர் அருகே கொடூர விபத்து: ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயம்
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் அவசர ஊர்தி கவிழ்ந்து விபத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயம்.
சென்னையில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி கொண்டு சேலத்தில் இறக்கி விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜோதி முஹம்மத் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தவரை பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்