108 ஆம்புலன்ஸ்க்கு விளக்கம் சொன்ன தமிழிசை - திகைப்பில் தொண்டர்கள்!

Smt Tamilisai Soundararajan
By Sumathi Jun 11, 2022 05:43 PM GMT
Report

சபரிமலை கோயில் விழாவில் ஆம்புலன்ஸ்க்கு 108 என்ற எண் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் ஒன்று உள்ளது என தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கமளித்துள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், சபரிமாலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா நடப்பெற்றது.

108 ஆம்புலன்ஸ்க்கு விளக்கம் சொன்ன தமிழிசை - திகைப்பில் தொண்டர்கள்! | Ambulance 108 Number For A Reason Says Tamizhisai

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் பங்கேற்றனர் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில்

ஹரிவராசனம் பாடல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

108 ஆம்புலன்ஸ்க்கு விளக்கம் சொன்ன தமிழிசை - திகைப்பில் தொண்டர்கள்! | Ambulance 108 Number For A Reason Says Tamizhisai

பின்னர் பேசிய தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஹரிவராசனம் பாடலில் 366 எழுத்துக்கள் உள்ளதால் தினமும் ஓர் எழுத்து நம்மை காக்கிறது, ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் உள்ளன.

இந்த 108 என்ற எண் இந்து மதம், புத்த மதம், யோக கலை ஆகியவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாகும். அதனால் தான் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ்க்கு கூட 108 என்று பெயர் வந்தது.

சபரிமலையில் உள்ள 18 படிகளை தாண்டினால் உடல் நலம், மனநலம் ஆகியவை மேம்படும் என கூறினார். இதை கேட்ட தொண்டர்கள் சற்று திகைத்து போனார்கள் என கூறப்படுகிறது.

இவரது இப்பேச்சு வழக்கம் போல் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. மேலும் இவர் பாஜகவில் இணைந்த பிறகு இவ்வளவு பக்தி வந்ததா இல்லை எப்போதுமே

இவ்வளவு பக்தியுடன் இருப்பாரா என்றவாறு இணையவாசிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.