ரூ.5 கொடுத்தாலும் உதவி தான் - பாராட்டல'னா சும்மா இருங்க - குஷ்புவிற்கு அம்பிகா பதிலடி

Ambika Kushboo
By Karthick Mar 14, 2024 05:52 AM GMT
Report

பாஜகவின் குஷ்பு மகளிர் உரிமை தொகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

குஷ்பு கருத்து

பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, இந்த திட்டத்தை தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா? என்று பேசினார்.

ambika-responds-to-kushboo-comments-on-1000-rs

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து குஷ்பு முரசொலி மாறனை சுட்டிக்காட்டி குஷ்பு ஒரு விளக்கமும் அளித்திருந்தார். இது தொடர்பாக பலரும், கடும் விமர்சனங்களை குஷ்பு மீது வைத்து வருகின்றனர்.

5 ரூபாய் என்றாலும்....

அதன் தொடர்ச்சியாக நடிகை அம்பிகாவும் கடும் விமர்சனத்தை குஷ்பு மீது வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,

ambika-responds-to-kushboo-comments-on-1000-rs

எதுவாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும் சரி.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி... அவர்கள் ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ..

ரூ.1000 பிச்சை சர்ச்சை - முரசொலி மாறனை சுட்டிக்காட்டி குஷ்பு விளக்கம்

ரூ.1000 பிச்சை சர்ச்சை - முரசொலி மாறனை சுட்டிக்காட்டி குஷ்பு விளக்கம்

ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள் ....இல்லையென்றால் எதுவும் சொல்லாதீர்கள்...ஏன் பிச்சை அப்படின்னு சொல்லணும்... 5 ரூபாய் கூட உதவும்... " என பதிவிட்டுள்ளார்.