ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையானது இந்தியா என்பதை கட்டமைத்தவர் அம்பேத்கர் : கமல்ஹாசன் ட்வீட்

Kamal Haasan
By Irumporai Dec 06, 2022 05:47 AM GMT
Report

அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.

அம்பேத்கர் நினைவு தினம்

சட்டமேதை அம்பேத்கரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவரின் சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையானது இந்தியா என்பதை கட்டமைத்தவர் அம்பேத்கர் : கமல்ஹாசன் ட்வீட் | Ambedkars Ambition M N M President Kamal

கமல்ஹாசன் ட்வீட்

அம்பேத்கரின் லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே சிறப்பு.

ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையுடையதே இந்தியா என்னும் சிந்தனையை விதைத்த பெருந்தகைமையாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரது லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம் என தெரிவித்துள்ளார்