நேரில் வந்த அம்பேத்கர் - அசந்து போய் பார்த்த மக்கள்...வைரலாகும் வீடியோ
அச்சு அசல் அம்பேத்கர் போன்ற தோற்றம் கொண்ட வருவர் நடந்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறப்பு
அம்பேத்கர் இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள "மாவ்” எனும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் தம்பதியருக்கு 14வது குழந்தையாக 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் பிறந்தார்.
இவரது குடும்பம் மராத்திய வர்கத்திரை தழுவியது. அம்பேத்கருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் “பீமாராவ் ராம்ஜி”.இவர்கள், “மகர” என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
அம்பேத்கரின், தந்தை மாலோஜி சாக்பால், ஆங்கிலேயரின் இராணுவத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர், வசித்த மோ பகுதியே இராணுவ தலைமையிடமாக செயல்பட்டு வந்தது.
படிப்பு
படிப்பில் முக்கிய கவனம் செலுத்தி வந்த அம்பேத்கர் உயர்கல்வி பயின்றார் பயிலும் காலத்தில் அவர் தீண்டதகாத மாணவராக பார்க்கப்பட்டார்.
இதனால் படிப்பில் ஆர்வம் குறைந்த நிலையில் விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அவர் வீட்டில் காண்பதே அரிதான நிகழ்வாகவே இருந்துள்ளது.
அம்பேத்கரின் தாய் மரணத்திற்கு பிறகு மறுமணம் செய்து கொண்டார் அவரது தந்தை. இது அவருக்கு பிடிக்கவில்லை. பின்னர் நுாற்பாலையில் வேலை செய்த அவர் தனது கவனத்தை படிப்பின் மீது செலுத்தினார்.
1907 ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளி மெட்ரிகுலேசன் தேர்வில் அம்பேத்கர் தேர்ச்சி பெற்றார். அப்போது தீண்ட தகாத மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றது ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
பின்னர் 1916 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆதாய பங்கு ஒரு வரலாற்று கண்ணோட்டம் என்ற ஆய்வு கட்டரையை கொலம்பிய பல்கலைகழகத்தில் சமர்பித்து டாக்டர் பட்டத்தை பெற்றார்.
வைரலாகும் வீடியோ காட்சிகள்
பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்திய அவர் இன்றளவும் மக்கள் மத்தியில் போற்றப்படும் மகத்தான தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அச்சு அசல் அம்பேத்கர் போன்று உள்ள நபரின் வீடியோ காட்சிக இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அம்பேத்கர் போன்று உடைகள் அணிந்து கையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன் வலம் வருகிறார் அந்த நபர். அவரை பார்த்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அப்படியே நேரில் பார்ததபோல் உள்ளது எந்த ஊர் என்று தெரியவில்லை அந்த ஊரார்களுக்கு வாழ்த்துகள்! ??#JaiBhim pic.twitter.com/iCG3jq3sli
— Guru samy (@Gurusam22264832) February 12, 2023