அம்பேத்கர், சமஸ்கிருதத மொழிக்கு ஆதரவு அளித்தார் : ஆளுநர் மாளிகையில் நீதிபதி பேச்சு
தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என ஆளுநர் மாளிகையில் நீதிபதி கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு :
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில் விழா ஒன்று நடைபெற்றது.இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய நீதிபதி தனக்கு ஆரம்பத்தில் இடஒதுக்கீடு என்பது சுத்தமாக பிடிக்காது என கூறியது அரங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.நான் பிராமண சமூகத்தில் பிறந்தவன். எனது மாணவன் ஒருவருக்கு நல்ல மதிப்பெண் இருந்தும், விருப்பப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

சமஸ்கிருதம் தேசியமொழி
அதே போல, பட்டியலின மாணவர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்தும் அவருக்கு இடம் கிடைத்தது என குறிப்பிட்டார். அதன் பிறகு அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது தான் இட ஒதுக்கீடு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரிந்தது என பேசினார்.
அடுத்து, அண்ணல் அம்பேத்கர், சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக கொண்டு வருவதற்கு ஆதரவு அளித்தார். என குறிப்பிட்ட நீதிபதி, சமஸ்கிருதம், இந்தி மொழிக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டாம், அது நமது வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் நல்லதல்ல என குறிப்பிட்டார்