ஹைதராபாத்தில் 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை இன்று திறப்பு

Hyderabad
By Thahir Apr 14, 2023 02:54 AM GMT
Report

ஹைதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறக்கப்பட உள்ளது.

ஹைதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கிறார்.

ஹைதராபாத்தில் 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை இன்று திறப்பு | Ambedkar Statue Inaugurated In Hyderabad Today

இந்தியாவிலேயே அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டுள்ள சிலைகளில், மிகவும் உயரமான சிலை என்ற சிறப்பை இது பெறுகிறது.

இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கேசிஆர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவரது உருவப்படத்திற்கு, பிரம்மாண்ட மாலை அணிவிக்கவும், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும், தெலுங்கானா மக்கள் மற்றும் நாடு முழுவதும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ள்ளது.

இதுபோக, இந்த நிகழ்வில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முதன்மை விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

அந்த வகையில், அம்பேத்கர் சிலை திறப்பு விழா கூட்டத்தில் 119 தொகுதிகளில் இருந்தும் 35,000 பேர் கலந்து கொள்வதை உறுதி செய்ய, ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று 750 அரசு சாலை போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் பொதுமக்களுக்காக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா தியாகிகள் நினைவிடத்திற்கு எதிரே, மாநிலச் செயலகத்துக்குப் பக்கத்தில், அமைந்துள்ள இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கரின் சிலை ஒவ்வொரு நாளும் மக்களை உற்சாகப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த மாநில நிர்வாகத்தையும் ஊக்குவிக்கும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் பேச்சு.