அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Thol. Thirumavalavan Madurai
By Thahir Dec 09, 2022 07:36 AM GMT
Report

மதுரையில் பெருங்குடி விமான நிலைய நுழைவாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அம்பேத்கர் சிலை திறப்பு 

இன்று மதுரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும், அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில், தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு பணிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான லோகோ-வை வெளியிட்டு பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

Ambedkar statue inaugurated by Chief Minister M. K. Stalin

அடுத்ததாக, மதுரையில் பெருங்குடி விமான நிலைய நுழைவாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் எம்.பி திருமாவளவன் உடனிருந்தார்.