அம்பேத்கர் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Thol. Thirumavalavan Government of Tamil Nadu Chennai
By Thahir Oct 27, 2022 06:59 AM GMT
Report

சென்னை அடையாற்றில், அம்பேத்கர் மணிமண்டம் மற்றும் அம்பேத்கர் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அம்பேத்கர் சிலை திறப்பு 

சென்னை அடையாறு பகுதியில் அம்பேத்கர் மணிமண்டபம் மறுசீரமைக்கப்பட்டது. மேலும், அந்த மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டது.

இந்த மணிமண்டபம் மற்றும் அம்பேத்கர் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று திறந்து வைத்துள்ளார்.

அம்பேத்கர் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Ambedkar Statue Inaugurated By Cm M K Stalin

இந்த விழாவில், திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

13 அடி அம்பேத்கர் வெண்கல சிலையானது மணிமண்டபம் நுழைவு வாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு சாலையை பார்த்தவாறு வைக்கப்பட்டுள்ளது.