ஏப்ரல் 14-ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
CM
MKStalin
Ambedkar'sbirthday
EqualityDay
Anounce
By Thahir
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு.
தமிழக சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி வேண்டியதை சேர்த்த ஓவியர்.
அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நுால்கள்,செம்பதிப்பாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் என அறிவித்தார்.
மேலும் அவர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் சமத்துவ நாள் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.