T20 World cup; இம்முறை கோலியால் அது முடியாது...அந்த வீரர் தான் - அம்பத்தி ராயுடு!
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து அம்பத்தி ராயுடு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த வீரர் தான்
நடப்பாண்டின் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஐ.சி.சி. தொடர்களில் அசத்தலாக செயல்படும் ஆஸ்திரேலியா,
முன்னாள் சாம்பியன் இந்தியா ஆகிய அணிகள் மீது அதிக எதிர்பார்ப்பார்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் டி20 உலகக்கோப்பை போட்டியில், நடக்கக்கூடிய பலவிதமான விஷயங்கள் குறித்து தங்களது கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அம்பத்தி ராயுடு
அந்த வகையில், இந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை எந்த வீரர் பிடிப்பார் என்று அம்பத்தி ராயுடு கணிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, "என்னை பொறுத்தவரை இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாதான் அதிக ரன்களை விளாசி முதலிடத்தை பிடிப்பார் என்று கருதுகிறேன்.
ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் ரோகித் சர்மா அபாரமான பார்மில் இருந்தார். ஐ.சி.சி. தொடரில் ரோகித் சர்மா எப்படியான வீரர் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான்" என்று தெரிவித்துள்ளார்.