ஜெகனுக்கு பை - பவனுக்கு ஹாய்..! ஆந்திர அரசியலை அதிரவைக்கும் அம்பத்தி ராயுடு..!
அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மூலம் அம்பத்தி ராயுடு அதிரவைத்துள்ளார்.
அம்பத்தி ராயுடு
இந்திய அணியில் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமானவர் 'அம்பத்தி ராயுடு'. இதுவரை 55 போட்டிகளில் விளையாடிய அவர் 47 சராசரி வைத்துள்ளார். தனது பேட்டிங் மூலம், சுழற்பந்து, வேகப்பந்து என அனைத்தையும் அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடுவார்.
ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இறுதியாக விளையாடி சாம்பியனாக ஓய்வுபெற்றார். மேலும், கடந்த மே மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் அவர், தனது ஓய்வினை அறிவித்தார்.
ஒரு வாரத்திலேயே...
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைந்து கொண்டார்.
ஆனால் கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அம்பதி ராயிடு தான் கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகுவதாக அறிவித்து x வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பவன் கட்சியில்...
ஆனால், தான் எதனால் கட்சியை விட்டும், அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்பதை குறித்து அம்பத்தி ராயுடு எந்த தகவலும் தற்போது கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் ஜெகன் மோகன் கட்சியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்த சில நாட்களிலேயே அவர் தற்போது தன்னை நடிகர் பவன் கல்யாணை நேரில் சந்தித்துள்ளார். இன்னும் கட்சியில் இணைவது குறித்து எந்த முடிவும் அவர் எடுக்காத நிலையில், விரைவில் அது குறித்தும் அம்பத்தி ராயுடு அறிவிப்பார் என கூறப்படுகிறது.