ரசிகர்கள் தோனியை கொண்டாடுவதால் ஜடேஜா கடுப்பானார் - அம்பத்தி ராயுடு ஓபன் டாக்!
சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தோனியின் ரசிகர்களை குறித்து பேசியுள்ளார்.
தோனி ரசிகர்கள்
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிஎஸ்க்கே அணி இதுவரை நடந்த 13 போட்டிகளில் 7 முறை வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.இந்த அணியின் தற்போதைய கேப்டனாக உள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி நன்றாகவே விளையாடி வருகிறது.
இந்த நிலையில், வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக எம் எஸ் தோனி விளங்குகிறார். 42 வயதிலும் இளம் வீரர்களுக்கு நிகராக தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.அவரது விளையாட்டு மற்றும் கூலான அணுகுமுறைக்கு இந்தியாவின் பல இதயங்களில் ஆழமாக பதிந்துள்ளார்.
அம்பத்தி ராயுடு
குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்களால் இவர் தீவிரமாக போற்றப்படுகிறார். ஒவ்வொரு முறையும் தோனி விளையாட களமிறங்கும்போதும், ரசிகர்களின் ஆரவார கூச்சல் மைதானத்தில் எதிரொலிக்கிறது. இது குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், "நானும், ஜடேஜாவும் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்கும் அடித்தால் கூட ரசிகர்கள் அமைதியாக இருப்பார்கள். கடந்த சில வருடங்களாக நானும் ஜடேஜாவும் இதை உணர்ந்தோம், எனவே சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் தோனியின் ரசிகர்கள் பின்பு தான் சென்னை ரசிகர்கள் என்று நான் சொல்வேன்.
அதற்காக ஜடேஜா மிகவும் கடுப்பானார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறினார். இந்த நிலையில் சென்னை அணி தங்களுடைய கடைசி போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. அதில் வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன் சென்னை களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.