"நமது எண்ணத்தை கொண்டு செல்லும் தூதுவர் வானதி சீனிவாசன்" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
வானதி சீனிவாசன் நமது எண்ணங்களை பிரதமரிடம் கொண்டு செல்லும் தூதுவராக இருப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை பொது கூட்டத்தில் பேசியுள்ளார். கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 வேட்பாளர்களுக்கும் அவினாசி தொகுதி வேட்பாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாபி வாக்குகளை சேகரித்தார். அப்போது ஒவ்வொரு வேட்பாளரையும் தனியாக குறிப்பிட்டு வாக்குகளை முதல்வர் சேகரித்தார். அப்போது கூட்டணி வேட்பாளரான வானதி சீனிவாசன் குறித்து பேசும் போது, அவர் நம்முடைய எண்ணங்களை பாரத பிரமரிடம் கொண்டு செல்லும் தூதுவராக இருப்பார் என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என கூறிய அவர், அ.தி.மு.க எதுவும் செய்யவில்லை என உண்மைக்கு மாறான தகவல்களை போகும் இடங்களில் எல்லாம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்கின்றார் என கூறிய அவர், கோவையில் மட்டுமே ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்து இருக்கின்றது என கூறி திட்டங்களை பட்டியலிட்டார்.
கோவையில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்,கிரிக்கெட் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்,இராணுவதளவாட உதிரிபாக தொழிற்சாலை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். 13 முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு போட்டு அது நடந்து வருகின்றது எனவும், 5 ஆண்டுகாலமாக வாய்தா வாங்கி கொண்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
தி.மு.க தலைவர் சொல்லும் ஊழல் குற்றசாட்டுகள் குறித்து இதே கொடிசியா மைதானத்தில்,மேடை போட்டு விவாதிக்கலாம் எனவும் அதற்கு நான் தயார் என சவால் விடுத்த முதல்வர், மக்கள் நீதிபதியாக இருந்து நீதி வழங்கட்டும் எனவும், மடியிலே கனமில்லை என்பதால் எங்களுக்கு பயமில்லை எனவும் தெரிவித்தார். தி.மு.க வினர் டூப் அடிக்கின்றனர். இதெல்லாம் எடுபடாது என தெரிவித்தார்.
மெகா ஊழல் கட்சி தி.மு.க எனவும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க எனவும் தெரிவித்த அவர், இஸ்லாமிய மக்களுக்கு நிறைய திட்டங்களை இந்த அரசு செய்து வருகின்றது எனவும், சிறுபான்மை மக்களை குழப்பி வாக்குகளை பெற முயல்கின்றனர், அதற்கு பலியாகி விடாதீர்கள்.
தமிழகத்தில் 40 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன, அதில் 33 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனவும்,மீதமுள்ள 7000 கோவில்கள் அனைத்தும் சீர்செய்து புனரமைக்கப்படும் எனவும் தெரிவித்த முதல்வர், பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
தி.மு.க விற்கு இந்த தேர்தல் இறுதி தேர்தலாக இருக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.