முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் - இந்திய பங்குசந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் அதிரடி

ambani-india-richman
By Jon Jan 03, 2021 09:18 AM GMT
Report

உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்தவர் முகேஷ் அம்பானி. ஆனால் கடந்த சில நாட்களாக இவருடைய நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைந்து வருகிறது.

இதனால் தற்போது அவர் 10 இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இருப்பினும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இவர்தான். ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென முகேஷ் அம்பானிக்கு ரூபாய் 15 கோடி அபராதம் விதித்து இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியம் உத்தரவிட்டிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2007ம் ஆண்டு முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூபாய் 15 கோடியும் அபராதம் விதித்திருக்கிறது.

இந்திய பங்குசந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.