அம்பானி வீட்டிற்கு அருகில் நின்ற காரில் வெடிப்பொருள்: அதிர்ச்சியில் காவல்துறை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நின்றிருந்த காரில் பயங்கர வெடிபொருள் கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது. இதனால் முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதுபற்றி விசாரிக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பையில் கார்மைக்கேல் சாலையில் 'அண்டிலியா' என்ற பெயரில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று உள்ளது.

இங்குதான் தனது குடும்பத்துடன் முகேஷ் அம்பானி வசித்து வருகிறார். இந்த பங்களாவை சுற்றிலும் எப்போதும் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியாகும். இந்த நிலையில் நேற்று முகேஷ் அம்பானியின் பங்களாவிற்கு வெளியே சந்தேகத்துக்கு இடமான சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மும்பை போலீசார் விரைந்து சென்றனர் தீவிர சோதனை அங்கு நின்றிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருப்பதைக க்ண்டறிந்தனர்.
உடனடியாக வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தி அதை அகற்றினர்.
இதனால் அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.