9 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அமேசான் நிறுவனம் - காரணம் என்ன?

Amazon
By Thahir Mar 21, 2023 06:29 AM GMT
Report

அடுத்த சில வாரங்களில் அமேசான் தனது நிறுவனத்தில் பணியாற்ற கூடிய 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் அதிரடி முடிவு - கலங்கும் ஊழியர்கள் 

தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக்,அமேசான் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது.

Amazon lays off employees

தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

இதையடுது்து ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி எழுதியுள்ள கடிதத்தில் இதை தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.