ஸ்பேசிலும் புரட்சி செய்ய உள்ள அமேசான் நிறுவனர் பெசோஸ் ..என்ன சாதனை தெரியுமா

amazon ownrocket jeffbezos
By Irumporai Jul 20, 2021 10:32 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆன்லைன் புக் விற்பனை நிறுவனமாகத் தொடங்கி இன்று மிகப் பெரிய ஆன்லைன் சாம்ராஜ்ஜியத்தையே கொண்டுள்ள அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இன்று தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார் .

மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன.

குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த வாரம்தான் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் ஸ்பேஸுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தை உருவாக்கிய உலகின் பணக்கார தொழிலதிபர், ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos)  இன்று விண்வெளி பயணம் மேற்கொள்ள தயாராக உள்ளார்.

பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் பணக்காரர் இல்லை என்றாலும், அவர் இந்த விமான பயணத்தின் மூலம் வரலாற்ற படைக்கிறார்.

இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ந்யூ ஷெப்பெர்ட் (New Sheperd) என்னும் விண்கலத்தில், இன்று, மேற்கொள்ளும் இந்த பயணத்தில், பெசோஸ் உடன், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி வாலி பங்க் (Wally Funk), 8 வயது ஆலிவர் டையமென் (Oliver Daemen) ஆகியோர் ஆகியோர் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த பயணத்தின் போது ஜெஃப் பெசோஸ் மற்றும் அவருடன் செல்பவர்கள் மொத்தம் 11 நிமிடங்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த முழு நிகழ்வும் இன்று இந்திய நேரடி 5:00 மணி முதல் துவங்கி லைவ் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.