வருங்கால மனைவிக்காக அத்தனை கோடிகளில் பங்களா வாங்கிய அமேசான் நிறுவன தலைவர் - எவ்வளவு தெரியுமா?

Amazon World
By Jiyath Aug 13, 2023 02:42 PM GMT
Report

தனது வருங்கால மனைவிக்காக சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் ஜெப் பெசோஸ். 

அமேசான் நிறுவன தலைவர்

ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் நிறுவன தலைவர் ஆவார். உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இவர் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை விவாகரத்து இவர் செய்தார். தற்போது லாரன் சான்செஸ் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.

சொகுசு பங்களா

இந்நிலையில் ஜெப் பெசோஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இந்தியன் க்ரீக் தீவில் தனது வருங்கால மனைவிக்காக சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்த பங்களாவில் 3 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகளும் உள்ளன.

வருங்கால மனைவிக்காக அத்தனை கோடிகளில் பங்களா வாங்கிய அமேசான் நிறுவன தலைவர் - எவ்வளவு தெரியுமா? | Amazon Jeff Bezos Buys 68 Million Dollar Mansion

இந்த சொகுசு பங்களா 2.8 ஏக்கர் நிலப்பரப்பில் 9259 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவை ரூ.564 கோடிக்கு வாங்கியுள்ளார் ஜெப் பெசோஸ். சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செஸுக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை வழங்கி காதலை வெளிப்படுத்தினார் ஜெப் பெசோஸ்.