போட்டி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்திய அமேசான் - ரூ.10 கோடி அபராதம் விதிப்பு
விதிகளை மீறி, போட்டியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல வான்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆன்லைனில் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது, குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பொருட்கள் மட்டும், அதிகமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள், அமேசானின் போட்டி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.
அவற்றை ஊக்கப்படுத்துவதன் மூலம், தனது போட்டியாளர்களுக்கு இழப்பை அமேசான் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாறு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பொருளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு, குடோன், டெலிவரி உள்ளிட்ட வசதிகளை அமேசான் செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனால் அமேசான் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ,.10 கோடி அபராதம் விதித்து இத்தாலி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தாலி சட்டப்படி, அங்கு நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்புக்கு, ஒரு நிறுவனம் மோசடி செய்கிறது என்றால் அதன் ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதிக்கும் அளவுக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அமேசான் நிறுவனம், இதனை எதிர்த்து சட்டப்படி மேல்முறையீடு செய்யப் போவதாக கூறியுள்ளது.