ஒரே அறையில் இரண்டு வெஸ்டர்ன் கழிவறைகள்...அற்புதமான திராவிட மாடல்…! – ஜெயக்குமார்

M K Stalin ADMK DMK
By Thahir Oct 11, 2022 10:30 PM GMT
Report

அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஒரே அறையில் இரண்டு கழிவறைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில், சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது.அங்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திட்ட அலுவலகத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Amazing Dravidian Model Jayakumar

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில், இரண்டு பேர் அருகருகே அமரும் வண்ணம் வெஸ்டர்ன் டாய்லெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

ஜெயக்குமார் விமர்சனம் 

இது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ,

ஒரே அறையில் இரண்டு வெஸ்டர்ன் கழிவறைகள்...அற்புதமான திராவிட மாடல்…! – ஜெயக்குமார் | Amazing Dravidian Model Jayakumar

தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு, ‘அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக..’ என பதிவிட்டு விமர்சித்துள்ளார்.