அமாவாசையன்று சதுரகிரிக்கு செல்ல தடை
அமாவாசையன்று சதுரகிரிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி ,அமாவாசை தினங்களில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
தற்போது கொரோனா காரணமாக சதுரகிரியில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று முதல் வருகின்ற 6ம் தேதி வரை பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் இன்று முதல் 6ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாரும் தாணிப்பாறைமலை அடிவாரம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள், தேவாலயங்கள் ,மசூதிகள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது ,ஒரே இடத்தில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு இந்த நடைமுறையை கடந்த இரண்டு வாரங்களாக அமல்படுத்தி உள்ளது.