மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்

tamilnadu amarnathramakrishnan
By Irumporai Sep 14, 2021 05:33 AM GMT
Report

கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2014-2016 வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியாற்றியிருந்தார்.

கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவரது தலைமையிலான குழு கீழடியில் ஆய்வு செய்த போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மீண்டும் தமிழகம்  திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன் | Amarnath Ramakrishnan Returns To Tamil Nadu

அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் வழங்கியது மத்திய தொல்லியல் துறை.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.