வீடு புகுந்த பெண் மீது தாக்குதல் - மீண்டும் கைதாகும் அமர் பிரசாத்..? தனிப்படை தீவிரம்..!
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி
தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக தற்போது கருதப்படுபவர் அமர் பிரசாத் ரெட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை பனையூரில் கட்சி கொடி விவகாரத்தில் கைதாகி சிறை சென்றும் வந்துள்ளார்.
அண்மைகாலமாக தீவிரமாக அரசியல் பணிகள் ஈடுபட்டு வரும் அமர் பிரசாத் ரெட்டி மீது மீண்டும் ஒரு வழக்கு பதியப்பட்டு அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை
பாஜக பெண் நிர்வாகி ஒருவரை வீடு புகுந்து தாக்கியதாக அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் டிரைவர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகிய 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கார் டிரைவர் ஸ்ரீதர் கைதாகி இருக்கும் நிலையில்,
அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.