கணவர் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை அமலாபால்? வெளியான முக்கிய தகவல்

Amala Paul Sexual harassment Tamil Nadu Police
By Thahir Sep 06, 2022 10:01 AM GMT
Report

அமலாபால் தனது ஆண் நண்பர் மீது கொடுத்த பாலியல் புகாரில் அவரது ஆண் நண்பர் பவீந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக அமலா பால் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கடாவர். இந்த படத்தை மலையாள இயக்குநர் கடாவர். எஸ். பணிக்கர் இயக்கி உள்ளார்.

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது நணபர் கைது செய்யப்பட்டார் .

கணவர் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை அமலாபால்? வெளியான முக்கிய தகவல் | Amala Paul Filed Sexual Complaint Against Husband

நடிகை அமலாபாலுக்கு விழுப்புரம் ஆரோவில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.அங்கு தனது நண்பர்களோடு அமலாபால் ,மகிழ்ச்சியாக கழிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமலாபாலுக்கு பவீந்தர் சிங் என்பவர் நண்பராக இருந்துள்ளார்.

15 பக்கங்கள் கொண்ட புகார்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் , அமலாபாலுக்கு கடந்த 2018 ஆண்டிலிருந்து பவீந்தர் சிங் பாலியல் கொடுத்து வந்ததாகவும் திரைப்படத்துறையிலிருந்து தனக்கு வரவேண்டிய பணத்தில்மோசடி செய்ததாக அமலாபாலின் மேலாளர் விக்னேஷ் 15 பக்கங்கள் கொண்ட புகாரினை விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அமலாபாலின் கணவரா?

இந்த நிலையில் ஜாமீன் கோரி பவீந்தர் சிங் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

Amala Paul

அப்போது அமலா பால் - பவ்விந்தர் சிங் இருவரும் பதிவு திருமணம் செய்து, குடும்பம் நடத்தியது குறித்த ஆதாரங்களை, அவர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது பின்னர் வழக்கில் இருந்து பவீந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.