உங்களைத் திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? மனம் திறந்த அமலா பால்!

Amala Paul Gossip Today Instagram Marriage
1 மாதம் முன்

தனது மறுமணம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை அமலா பால் அமைதியாகப் பதில் அளித்துள்ளார்.

 அமலா பால்

நடிகை அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது.

amala paul

பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இந்த நிலையில், இயக்குநர் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

பாடகர் பவிந்தர் சிங்

இதற்கிடையே நடிகை அமலா பால், பாடகர் பவிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. ஆனால், நடிகை அமலா பால் அதை மறுத்தார்.

instagram

இதையடுத்து இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பவிந்தர் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அமலா பால் வழக்குத் தொடர்ந்தார்.

ரசிகர் கேள்வி

இப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களை திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? என்றுக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமலா பால், ‘நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை.

நான் இப்போது என் சுயத்தைத் தேடும் பயணத்தில் இருக்கிறேன். நான் கண்டுபிடித்ததும் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

61 வயது மூதாட்டியை மணந்த 24வயது பையன்.. குழந்தை பெற 1 கோடி செலவு!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.