சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கிய மாமியார் அமலா - உச்சக்கட்ட பரபரப்பில் திரையுலகம்

 நடிகை சமந்தா விவகாரத்து விவகாரம் புயலை கிளப்பி வரும் நிலையில் 30 வருடங்களுக்கு பின்னர் அவரது மாமியாரும், நடிகையுமான அமலா நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி.ராஜேந்தர் இயக்கிய ‘மைதிலி என்னை காதலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா ரஜினி, கமல், மம்மூட்டி, உள்ளிட்ட பல்வேறு முன்னணி கதாநாயர்களுடன் 80களில் நடித்து புகழ் பெற்றார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்த அவர் கடைசியாக தமிழில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான 'கற்பூர முல்லை' என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்த ஆண்டே நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் .

இந்நிலையில் தற்போது சுமார் 30 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஷர்வானந்த் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமிழில் ‘கணம்’ என பெயரிடப்பட்டுள்ளது.ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கணம் படத்தில் அமலா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்