தலையில் எண்ணெய் தடவ சிறந்த நேரம் இது? காலையா? இரவா?
ஆண் பெண் இருவருக்கும் முடி கூடுதல் அழகை கொடுக்கக்கூடியது. ஆனால் முடியை பராமரிப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு சில மெனக்கிடல்கள் நாம் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது . குறிப்பாக எல்லோரும் தலைக்கு எண்ணெய் வைக்கும் வழக்கத்தை கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் நம்முடைய முடி அடர்த்தியாக வளர்வதற்கு எண்ணெயை தடவ சிறந்த நேரம் காலையா அல்லது மாலையா என்கின்ற குழப்பம் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
1. உலர்ந்த அல்லது சேதமடைந்த முடி கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவி கொள்ளலாம். ஒரு சிலருக்கு எண்ணெய் சுரப்பு தன்மை அதிகமாக இருக்கும். அவர்கள் காலை நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு நல்ல பலனை கொடுக்கும்.

2. காலை நேரத்தில் முடிக்கு எண்ணெய் வைக்கும் பொழுது அவர்கள் தலை சருமத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. தலை முடி வறட்சி அடைவதை குறைக்கிறது. மேலும், எண்ணெய் தேய்த்து 30 நிமிடம் முதல் இரண்டு மணி நேரம் வரை தக்க வைப்பது அதிக எண்ணெய் சேர்வதை தடுக்க உதவுகிறது.
மேலும், எண்ணெய் பசைத்தன்மை மற்றும் முகப்பரு பிரச்சனை கொண்டவர்களின் தலைக்கு காலை நேரங்களில் எண்ணெய் வைப்பதே அவர்களுக்கு ஒரு நல்ல பலன் கொடுக்கும். இருப்பினும் தலைக்கு எண்ணெய் தேய்த்து வெளியே செல்லும் பொழுது தூசி மாசுக்கள் முடியில் ஓட்டக்கூடிய அபாயம் உள்ளது.
அது மட்டுமல்லாமல் வெயில் காலங்களில் காலையில் தலைக்கு நாம் எண்ணெய் தேய்க்கும் பொழுது தலை சருமத்தில் சில அழுக்குகள் சேருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் காலை நேரங்களில் எண்ணெய் தடவ வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது நேரம் எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிட்டு பிறகு ஷாம்பு வைத்து குளிப்பது நல்லது.

3. இரவு நேரங்களில் தலை முடிக்கு எண்ணெய் தடவும் பொழுது அவை நீண்ட நேரம் நம் தலையில் இருந்து நம் முடிக்கு ஊட்டம் அளிக்கிறது. இது நம்முடைய உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை சீரமைக்க உதவியாகவும் அமைகிறது.
அதே போல் முடி உலர்தல் பிரச்சனை கொண்டவர்கள் இரவு நேரங்களில் எண்ணெய் வைக்கும் பொழுது விலகுகிறது. முக்கியமாக நம் தலையில் இரவு நேரங்களில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யும் பொழுது நமக்கு நல்ல உறக்கமும் கிடைக்கிறது. மன அழுத்தம் குறைந்து மன அமைதி உண்டாகிறது.
இருப்பினும் சிலருக்கு சரும துளைகள் அடைப்பட்டு பொடுகு போன்ற பிரச்சினைகள் வரலாம். எண்ணெய் சுரப்பு அதிகம் கொண்டவர்கள் அடிக்கடி இரவு நேரங்களில் எண்ணெய் தடவினால் அவர்களுக்கு பொடுகு பிரச்சனை உருவாகும். வறண்ட தலைமுடி மற்றும் சேதம் அடைந்த முடி உள்ளவர்களுக்கு மட்டுமே இரவு நேரங்களில் எண்ணெய் தடவுவது சிறந்ததாக அமையும்.