நான் யாரையும் கூட்டணிக்கு அழைத்து பேசவேயில்லை - ஒரே போடுபோட்ட இபிஎஸ்
யாரையும் கூட்டணிக்கு அழைத்து நான் பேசவேயில்லை என இபிஎஸ் விளக்கமளித்துள்ளார்.
கூட்டணி
கடந்த 7-ந்தேதி முதல் தொகுதிவாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ரப்புரை மேற்கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இருப்பதாக கூறுகிறார் நாங்கள் எதுவும் சொல்லவில்லை.
இபிஎஸ் விளக்கம்
அதிமுக பாஜக கூட்டணி என்பதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம். விசிக, தவெக, சீமான் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து எங்கேயாவது நான் வெளிப்படுத்தி உள்ளேனா... 46 சட்டமன்ற தொகுதிகளிலும் பேசியுள்ளேன் பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளேன்.
எங்கேயாவது நான் கூட்டணிக்கு அவர்களை அழைத்தேனா. அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள கூறியதை எல்லாம் கேள்வியாக கேட்டால் யூகத்தின் அடிப்படையில் கேட்கின்ற கேள்விக்கு பதில் கூற முடியாது. பெரிய கட்சி கூட்டணிக்கு வரும்போது நானே கூறுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.