நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க - நடிகர் அஜித்
திரைத்துறைக்கு பின்னால் தன் அசாத்திய திறமையால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் அஜித்குமார். எளிய பின்புலத்துடன் திரைத்துறைக்கு வந்த அவருக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நாடு சுற்றும் நடிகர் அஜித்
திரைப்படங்கள் மட்டுமின்றி பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சமையல் செய்வது ஆகியவற்றில் தனித்திறமை கொண்டவர் அஜித். தற்போது நீண்ட துாரம் பைக் ரைடிங் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த அஜித் தற்போது அதிகம் வெளியில் தலை காட்ட கிளம்பி விட்டார். இதற்கு காரணம் பைக்கில் உலகை சுற்றி வர வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு நாட்களை தவிர மற்ற ஓய்வு நாட்களில் எல்லாம், பைக் ரைடு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்தியாவுக்கு எங்கெங்கு செல்ல வேண்டும் என்று ஒரு தனி ப்ளானே போட்டுள்ளாராம்.

என்னை ஏன் தேடுறீங்க?
இந்த நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர்கள் சிலர் அவர் செல்லும் பைக் ரைட்டிங் ஸ்பாட்களை தேடிச் சென்று வருகின்றனர். அந்த வகையில் அவரை தேடிச் சென்ற ரசிகர்களிடம் அவர் பேசிய வீடியோ ஒன்று வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
அவரை காண தேடிச் சென்ற அவரது ரசிகர்கள் அவரை கண்ட உடன் உங்களைத்தான் ரெண்டு நாளா தேடிட்டு இருக்கோம் என கூறியுள்ளனர். அதற்கு அஜித், என்னை எதுக்கு தேடுறீங்க... நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா? என அவர் கிண்டலாக பேசும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
#Ajith sir ❤️?#AjithKumar #AK #AK61 pic.twitter.com/LM6XkYO7qZ
— Ajith Network (@AjithNetwork) September 16, 2022
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil