விஜய்க்குதான் ஓட்டு போடுவேன்; வாக்கு சேகரிப்பேனா? - நடிகை ஆல்யா மானசா ஆதரவு
தேர்தலில் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் என ஆல்யா மானசா பேசியுள்ளார்.
ஆல்யா மானசா
மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் மீடியாவில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானார்.
இதனிடையே உடன் நடித்து வந்த கார்த்திக் சஞ்சீவை என்பவரை காதலித்து வந்த இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
மதுரை உணவு
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர், கேரளா மாநிலம் ஆலப்புழாவில் ரூ.2 கோடிக்கு போட் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்நிலையில் மதுரையில், தனியார் பெண்கள் அழகு சாதன கடையினை திருப்பு விழாவிற்கு ஆல்யா மனசா வருகை தந்திருந்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மற்ற ஊர்களுக்கு செல்வதை விட மதுரைக்கு வருவது எப்போதுமே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். மதுரையின் உணவையும், அந்த மக்களின் அன்பையும் மிஞ்சவே முடியாது.
விஜய்க்கு ஓட்டு
சினிமாவில் வாய்ப்பு வருகிறது. சினிமாவில் நடித்தால் நீங்கதான் என்னை தேடி தியேட்டருக்கு வர வேண்டும். சீரியலில் நடித்தால் 9 மணிக்கு எல்லாருடைய வீட்டிலும் வந்துவிடுவேன். அதனால் சீரியலில் நடிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது" என கூறினார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட போது, "என் ஓட்டு விஜய் சாருக்குதான். குடும்பம், படப்பிடிப்பு என அதிலே நேரம் ஆகி விடுவதால் அவருக்கு தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரித்து ஆதரவு கொடுக்க நேரம் இருக்காது. பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் கண்டிப்பாக விஜய் சாருக்கு ஓட்டு போடுவேன்" என தெரிவித்தார்.