Tuesday, May 6, 2025

அப்பா'க்கு அந்த நோய்...அதனால் தான் சினிமா'வ விட்டுட்டேன் - ஆலியா மானசா

Alya Manasa
By Karthick a year ago
Report

ஆலியா மானசா

சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. அதே சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அப்பா

சின்னத்திரையில் இருந்து திருமணத்திற்காக சிறிது காலம் ஓய்வு பெற்ற ஆலியா மானசா, தற்போது மீண்டும் இனியா என்ற தொடரில் மீண்டும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அப்பா

தற்போதும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஆலியா மானசா சமீபத்திய யூடியூப் பேட்டியில் தனது திரைத்துறை வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்பா'க்கு 

அவர் பேசும் போது, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தாக குறிப்பிட்டு, அப்போதெல்லாம் காலையில் எழுந்து, மேக்கப் போட்டு ஆடிஷனுக்கு செல்வேன் எனக் கூறிய மானசா, அப்படி சென்ற போது, சில இடங்களில் அங்கு சொல்லும் விஷயங்கள் தனக்கு செட் ஆகாது என்றும் பல நேரங்களில் அழைப்பதாக சொல்லி வெளியில் அனுப்பி விடுவார்கள் என்றும் பகிர்ந்தார்.

alya manasa emotional interview about-dad

அப்போது பணத்தேவை குடும்பத்தில் இருந்த காரணத்தால் ஜிம் பயிற்சியாளராக, குழந்தைகளுக்கு நடன பயிற்சியாளராக, பாடல்களில் பின்னணியில் டான்சராக இருப்பது என பல வேலைகளை செய்ததாக கூறினார்.

அப்பா

சினிமாவில் முயற்சித்த போது, சின்னத்திரை வாய்ப்பு கிடைத்த நிலையில், அப்போது அப்பாவிற்கு கேன்சர் நோயால் பாதிப்பு இருந்ததால், அவரை காப்பாற்ற சினிமா கனவை விட்டு சீரியலுக்கு வந்ததாக சுட்டிக்காட்டினார்.