வேறு நடிகருடன் ரொமான்ஸ் செய்தால் சஞ்சீவ் இப்படிதான் பண்ணுவாரு - ஆல்யா ஓபன் டாக்!
கணவர் சஞ்சீவ் குறித்து நடிகை ஆல்யா மனம் திறந்துள்ளார்.
நடிகை ஆல்யா
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அதில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறப்பின்போது விஜய் டிவியின் சீரியலில் இருந்து விலகினார். தற்போது, சன் டிவியின் இனியா தொடரில் நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கில் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் அப்படித்தான்..
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆலியா, ரொமான்ஸ் காட்சிகளில் தான் நடித்தால், சிரியலில் என்ன இப்படி செய்துக் கொண்டிருக்கிறாய் என்று சஞ்சீவ் கேள்வி எழுப்புவார். அப்படியே ஒரு லுக் விடுவார்.
மற்ற கணவர்கள் போலத்தான் சஞ்சீவும் தன்மீது மிகவும் பொசசிவ்வாக இருப்பார். ஆனாலும் தன்னுடைய கணவர் மிகவும் நல்லவர் எனத் தெரிவித்துள்ளார்.