என்றைக்கும் “தமிழ்நாடு, தமிழ்நாடு தான்” பிக்பாஸ் வீட்டிற்குள் தொகுப்பாளினி டிடி பேச்சு
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தொகுப்பாளினி டிடி போட்டியாளர் விக்ரமனிடம் தமிழ்நாடு தமிழ்நாடு தான் என்று பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளுநருடன் மோதல்
இந்த நிலையில் கடந்த 9ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அமைதிப்பூங்கா முதலான பல்வேறு சொற்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கும்போது தவிர்த்தார்.
இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என தீர்மானத்தை வாசித்தார்.
இதனையடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் அவையை விட்டு வெளியேறியதால் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகைகளின் போது வீடுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ள கோலத்தில் தமிழ்நாடு வாழ்க என பலரும் பதிவு செய்துள்ளனர்.
டிடியின் அதிரடி பேச்சு
இதனிடையே தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதற்காக பிரபல தொகுப்பாளினி டிடி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். அங்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது டிடியிடம் பேசிய போட்டியாளர் விக்ரமன் இந்த பொங்கல் விழா மட்டும் அல்ல இன்னொரு முக்கியமான நாளும் கூட. நம்ம மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வந்த நாள் என்று குறிப்பிட்டார்.

அப்போது டிடி விக்ரமனின் கையை பிடித்து இதை தெரிந்து சொல்றீங்களா...இல்லை தெரியாம சொல்றீங்களா ..எனக்கு தெரியல என்றார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vikraman talks about the name "Tamil Nadu".#BiggBossTamil6 pic.twitter.com/WCEBynPb1Y
— Bigg Boss Follower (@BBFollower7) January 16, 2023
இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil