இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..மாற்று வீரர்களை அதிரடியாக களமிறக்கும் பிசிசிஐ

decision bcci indian team players covid positive ind vs wi alternate players
By Swetha Subash Feb 03, 2022 06:48 AM GMT
Report

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வரும் 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் பயோ பபுள் முறைக்குள் இருந்து வந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், நவதீப் சைனி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்,இந்திய அணி பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்ற இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கிந்திய தீவுகள் தொடர் ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியானது.

ஆனால் மற்ற வீரர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளதால் 18 பேர் கொண்ட அணியில் 15 பேர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்.

தற்போது மாற்று வீரராக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது மேற்கிந்திய தீவுகள் போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என தெளிவாகியுள்ளது.

போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதால், மாற்று வீரர்களை தயார் செய்வதில் பி.சி.சி.ஐ.க்கு எவ்வித சிக்கலும் இருக்காது.

மேலும் சுப்மான் கில், இஷான் கிஷன், குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஷாரூக்கான், பிரித்வி ஷா, சேத்தன் சுக்ரியா ஆகியோரை தயாராக இருக்கும் படி பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.