எனக்கு குழந்தை பிறக்கும் தேதியையும் சொல்லிவிடுங்கள் - கடுப்பான நடிகை நிக்கி கல்ராணி

Aadhi Nikki Galrani Tamil Cinema
By Thahir Nov 19, 2022 10:39 AM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்தாக தகவல் பரவிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் 

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

எனக்கு குழந்தை பிறக்கும் தேதியையும் சொல்லிவிடுங்கள் - கடுப்பான நடிகை நிக்கி கல்ராணி | Also Tell Me The Date Of Birth Of The Baby Nikki

திருமணத்தை தொடர்ந்து இந்த ஜோடி தேனிலவுக்காக பாரிஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்கள். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இருவருக்கும் இடையே திருமணமாகி நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெற்றது. இதையடுத்து நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது.

கடுப்பான நிக்கி கல்ராணி 

மேலும் நிக்கி கல்ராணி, கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து அவரது ரசிகர்கள் நிக்கி கல்ராணிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இதனை மறுத்துள்ள அவர், நான் கர்ப்பமாக இருப்பதாக வைரல் செய்திகளை கொடுத்தவர்கள் குழந்தை பிறக்கும் தேதியை கூறியிருக்கக்கூடாதா? என கிண்டலடித்துள்ளார். மேலும் பேசிய அவர் இந்த மாதிரி நல்ல செய்தியை நானே சொல்வேன் என்று கூறியுள்ளார்.